search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை வாய்ப்புகள்"

    • இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும்
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை  தாங்கி பேசியதாவது, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தீன்தயாள் உபாத்யாய -கிராமின் கௌசல்ய - யோஜனா (DDU-GKY) திட்டத்தின்கீழ் "இளைஞர் திறன் திருவிழா" நடைபெற்றது. இந்த இளைஞர் திறன் திருவிழாவில், 8-ஆம் வகுப்பிற்கு மேல் கல்வி தகுதியுடைய 35 வயதுக்குட்பட்ட அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமுள்ள திறன் பயிற்சியை தேர்வு செய்து பயிற்சியில் இணைந்து பயன்பெற வழி வகை செய்யப்பட்டது. மேலும், பயிற்சிக்கு பின் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் வேலைவாய்ப்பினை வழங்கிடும். மேலும், சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவத்தக்க அரசுத் திட்டங்கள் பற்றிய விவரங்களை இம்முகாமில்அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டது. அதன்படி இளைஞர் திறன் திருவிழாவில் 300 க்கும் மேற்ப்பட்ட

    இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் 13 தொழில் பயிற்சி நிலையங்கள் வாயிலாக ௯௫ இளைஞர்கள் தொழிற் திறன் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளார்கள். அவர்களுக்கான தொழிற் திறன் பயிற்சி சோர்க்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி காலங்கள் 3 முதல் அதிகபட்ச 6 மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். எனவே இத்திறன் திருவிழாவை இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு தாங்களாகவே புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் தெரிவித்தார். இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கக திட்ட இயக்குநர் சுந்தரராஜன், உதவி திட்ட இயக்குநர்கள் நாராயணசாமி, கார்த்திகேயன், வட்டார இயக்க மேலாளர் சதீஷ்குமார், கள்ளக்குறிச்சி நகர் மன்ற தலைவர் சுப்புராயலு, கள்ளக்குறிச்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் அலமேலு ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×